Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் கதையில் திருப்தியில்லை… ரீமேக்கில் இருந்து விலகிய சல்மான் கான்!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (15:43 IST)
தமிழில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன.

கொரோனாவுக்குப் பிந்தைய வெளியீடுகளில் மாஸ்டர் திரைப்படம் மட்டுமே லாபத்தை எடுத்ததாக சொல்லப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளோடு வெளியான நிலையில் பெரும்பாலான திரையரங்குகள் அந்த விதியைக் கடைபிடிக்காமலும் அதிக விலைக்கு டிக்கெட்களை விற்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் சில நாட்கள் கூட்டத்துக்கு படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும் ஓடாத படத்தை ஓடியதாக பொய்க் கணக்கு காட்டுவதாகவும் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் எப்படி பார்த்தாலும் திரையரங்குகளுக்கு மாஸ்டர் திரைப்படம் உயிர்க்கொடுத்துள்ளது உண்மைதான் என திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த படம் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தாலும் தற்போது நேரடியாக இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம். இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் சல்மான் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம் ரீமேக் உரிமையை பெற்றுள்ள தயாரிப்பாளர்கள் முராத் கெதானி மற்றும் எண்டெமால் ஷைன். இதையடுத்து இந்த படத்தை இயக்குனர், நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் கதையில் தனக்கு உடன்பாடில்லை என சல்மான் கான் இப்போது விலகியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் விக்ரமன் திருமணம்.. மணமகள் யார் தெரியுமா?

பிங்க் நிற சேலையில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

கண்ணைப் பறிக்கும் உடையில் சமந்தா ஸ்டைலிஷ் ஃபோட்டோ ஆல்பம்!

துல்கர் சல்மான் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக ‘லக்கி பாஸ்கர்’!

கேம் சேஞ்சர் படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments