Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைக்கொடுக்குமா ஸ்பைடர்? விற்பனை விவரங்கள் உள்ளே!!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (17:57 IST)
மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் ஆகியோர் நடித்துள்ள ஸ்பைடர் படம் வரும் 27 ஆம் தேதி மகேஷ் பாபு பிறந்த நாளன்று வெளியாகவுள்ளது. 


 
 
மகேஷ்பாபு இதற்கு முன் நடித்து தெலுங்கில் வெளியான பிரமோற்சவம் திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது. இதனால் ஸ்பைடர் படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார் அவர்.
 
ஸ்பைடர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ் படமாகும்.
 
மகேஷ்பாபு நடித்த படங்கள் பெரும்பாலும் 150 கோடி வரை வசூல் செய்யும். ஸ்பைடர் படத்துக்கு 145 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக தெரிகிறது.
 
தெலுங்கில் ஸ்பைடர் 84 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. எஃப்எம்எஸ் உரிமை சுமார் 20 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். 
 
தமிழ்நாடு, கர்னாடகாவில் ஸ்பைடர் படத்தை வெளியிடும் விநியோக உரிமையை 21 கோடிக்கு லைக்கா தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது. 
 
தமிழ்நாட்டில், சென்னையில் ரூ.1.50 கோடிக்கும், செங்கல்பட்டில் ரூ.4 கோடிக்கும், கோவையில் ரூ.3.50 கோடிக்கும், மதுரையில் ரூ.2.50 கோடிக்கும், சேலத்தில் ரூ.1.70 கோடிக்கும், நெல்லையில் ரூ.1.10 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments