Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகலகலா வல்லவனுக்கு யூ, ஜுலை 31 வெளியாகிறது

Webdunia
திங்கள், 20 ஜூலை 2015 (20:32 IST)
லட்சுமி மூவி மேக்கர்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்த படம், சகலகலா வல்லவன். இந்தப் படத்துக்கு முதலில் அப்பாடக்கர் என்றுதான் பெயர் வைத்திருந்தனர். படத்தின் பெயர் காரணமாக 30 சதவீத வரிச்சலுகையை இழக்க வேண்டி வருமோ என அப்பாடக்கர் என்பதை சகலகலா வல்லவன் என மாற்றினர்.
 
ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி நடித்துள்ள இந்தப் படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். படம் முடிந்து தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யூ சான்றிதழ் அளித்தனர்.
 
30 சதவீத வரிச்சலுகை உத்தரவாதம் என்பதால் ஜுலை 31 -ஆம் தேதியே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments