Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாய் அப்யங்கரின் அடுத்த சுயாதீனப் பாடல் ‘சித்திர புத்திரி’ இன்று ரிலீஸ்!

vinoth
வெள்ளி, 31 ஜனவரி 2025 (10:26 IST)
கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றனர் சுயாதீன இசைக்கலைஞர்கள். அதில் முன்னணியில் உள்ளார் சாய் அப்யங்கர். ஆன்லைன் ஸ்ட்ரிமீங் தளங்களில் ஒன்றான ஸ்பாட்டிஃபை  கடந்த ஆண்டுக்கான அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடலாக ‘கட்சி சேர’ பாடல் அனிருத் ரஹ்மான் பாடல்களை எல்லாம் மிஞ்சி முதலிடம் பிடித்தது.

இதையடுத்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’, சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ மற்றும் ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் ஆகியவற்றில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இன்னும் ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையிலும் அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

இந்நிலையில் சாயின் அடுத்த சுயாதீன இசை ஆல்பமான ‘சித்திர புத்திரி’ இன்று இரவு 7 மணிக்கு ரிலீஸாகிறது. இந்த பாடலை திங்க் ம்யூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments