Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடி யில் வெளியாகும் ஹெச் வினோத்தின் படம் – தயாரிப்பாளர் அதிரடி முடிவு!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (17:44 IST)
ஹெச் வினோத் கதை, திரைக்கதை வசனத்தில் உருவான சதுரங்கவேட்டை 2 திரைப்படம் இப்போது ஓடிடியில்  வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இயக்குனராக இருக்கும் ஹெச் வினோத் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் சதுரங்க வேட்டை. அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்துக்காக கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை அவர் எழுதிக் கொடுத்தார்.

அந்த படத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாகவும், ஹீரோயினாக த்ரிஷாவும் நடித்துள்ளார். ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். மனோபாலா தயாரித்துள்ள இந்தப் படம், ஆயுத பூஜைக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கும் அரவிந்த் சாமிக்கும் இடையே பிரச்சனை எழுந்ததால் சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடந்தது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிபாளர் மனோ பால முயற்சி செய்து வருகிறார். இதனால் விரைவில் படம் ரிலீஸாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சென்சார் தகவல்!

விவேக் காட்சிகளை நேற்றுதான் படமாக்கியது போல உள்ளது… இந்தியன் 2 நிகழ்வில் கமல் பேச்சு!

மகாராஜா பட இயக்குனரை சந்தித்து பாராட்டிய இயக்குனர் நித்திலன் சாமிநாதன்!

நம்ப முடியாத அளவுக்கு எளிமையானவர் அஜித்… சந்திப்பு குறித்து நடராஜன் நெகிழ்ச்சி!

இந்தியன் 2 டிரைலர்ல இத கவனீச்சிங்களா?... மீண்டும் ரிலீஸ் தள்ளிப் போகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments