Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் தொலைக்காட்சியில் எஸ் ஏ சந்திரசேகர் நடிக்கும் சீரியல்!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (09:00 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனராக பல படங்களை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் அவருக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

தனது மகன் விஜய்யை கதாநாயகனாக அறிமுகமாக்கி, அதன் பின்னர் அவரை ப்ரமோட் செய்யும் வேலைகளில் ஈடுபட்டதால் முன்பு போல பிஸியான இயக்குனராக செயல்படவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் இயக்கத்துக்கு திரும்பியுள்ள அவர் சமீபத்தில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கி வெளியிட்டார்.

இதற்கிடையில் கொடி, மாநாடு போன்ற படங்களின் மூலம் நடிகராக அறியப்பட்ட எஸ் ஏ சந்திரசேகர், இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த சீரியலை தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ராதிகா. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments