Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் ஜே சூர்யா பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் பொம்மை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (08:48 IST)
மான்ஸ்டர் படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

படம் ரிலீஸுக்காக தயாராக உள்ள நிலையில் படத்தின் கதாநாயகன் எஸ் ஜே சூர்யா படத்தில் யுவனின் இசையமைப்புப் பணிகளை பற்றி வானளாவ புகழ்ந்து பேசியுள்ளார். இந்த படம் முடிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக ஆன நிலையில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

எதிர்மறை விமர்சனங்களின் எதிரொலி… பாதியாகக் குறைந்த தக் லைஃப் படத்தின் காட்சிகள்…!

மகாராஜா வசூலில் பத்தில் ஒரு மடங்குதான்… VJS ன் ‘ஏஸ்’ பட வசூல் விவரம்!

ஒன்பது கிரகங்களில் உச்சம் பெற்ற ஒருவன்… அஜித்தின் அடுத்த படத்துக்கும் சாய் அப்யங்கர்தான் இசையா?

மனுசி படத்தை மீண்டும் பார்த்து மறு ஆய்வு செய்ய சென்சார் போர்டு சம்மதம்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments