Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்சூர் அலிகானுக்கு ரூ1 லட்சம் அபராதம்: மனுவையும் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:16 IST)
நடிகை த்ரிஷா உள்பட  3 பேர் மீது  மானநஷ்ட வழக்கு தொடர அனுமதி கேட்ட நடிகர் மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து த்ரிஷா தனது கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. 
 
ஆனால் திடீரென மன்சூர் அலிகான் த்ரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி ஆகிய மூன்று பேர் மீது மான நஷ்ட வழக்கு தொடர அனுமதி கோரி தாக்கல் செய்தார். 
 
இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த்து. மேலும் இந்த தொகையை இரண்டு வாரங்களில் அவர் அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.. இன்று ஒரே நாளில் ரூ.1280 குறைவு..!

பாரதிராஜாவை பாட்டு பாடி சோகத்தில் இருந்து மீட்கும் கங்கை அமரன்… இணையத்தில் பரவும் நெகிழ்ச்சியான வீடியோ!

மகனுக்கு கார் ரேஸ் பயிற்சி தரும் அஜித்.. அசத்தல் வீடியோ

தங்க கடத்தல் நடிகை ரன்யாவிடம் இருந்து விவாகரத்து கேட்கும் கணவர்.. நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!

விக்ரம் படத்துக்காக பழைய ரஜினி பட டைட்டிலைத் தேடும் படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments