Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்ல கலைஞனுக்கு இப்படி ஒரு சாவா? வெறுமையில் ரோபோ சங்கர்!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (15:18 IST)
நடிகர் ரோபா சங்கர், வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து காணொளியை பகிர்ந்துள்ளார். 
 
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 
 
தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையிலே இறந்துவிட்டார். 
 
இதனையடுத்து அவருடன் சின்னத்திரை உலகிலும் மேடை நிகழ்ச்சிகளும் 19 வருடங்களாக நடித்த ரோபா சங்கர், வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து காணொளியை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பின்வருமாறு பேசியுள்ளார்.
 
எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதில் தரும் வகையில் தமது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி அனைவரையும் கட்டிப்போடச் செய்து சிரிப்பலையில் ஆழ்த்தக் கூடியவர் வடிவேல் பாலாஜி. 
 
மரணம் இப்படி கூட வருமா என நண்பனுடைய சாவை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. 10 நாட்களுக்கு முன்பு அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது எனது குடும்பத்தினர் கூட அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
 
10 நாட்களாக உயிருக்குப் போராடிய அவர் இப்போது நம்மோடு இல்லை. அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லோரும் பிரார்திப்போம். நல்ல கலைஞனுக்கு கூட இப்படி ஒரு சாவு கொடுப்பதா இறைவா என்று ஒருவித வெறுப்பை தருகிறது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments