Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டுக்குப் போகாதீங்க… – ஏ.ஆர்.முருகதாஸிடம் வேண்டுகோள் விடுத்த ஆர்.ஜே.பாலாஜி

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (17:28 IST)
தயவுசெய்து பாலிவுட்டுக்குப் போகாதீங்க. தமிழ் சினிமாவுக்கு நீங்க தேவை என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.


 

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடைபெற்றது.
 
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே.பாலாஜி, இந்தப் படத்தில் நான் காமெடியனாக நடிக்கவில்லை. மகேஷ் பாபுவுடன் இணைந்து படம் முழுவதும் வருவேன். நான் இதுவரை விஜய், அஜித், ரஜினி, கமலுடன் இணைந்து நடித்தது இல்லை. முதன்முறையாக மகேஷ் பாபு எனும் சூப்பர் ஸ்டாருடன் நடித்துள்ளேன்.
 
ஏ.ஆர்.முருகதாஸ் சாருக்கு ஒரு வேண்டுகோள். தமிழ் சினிமாவுக்கு நீங்கள் தேவை. சமூக அக்கறை கொண்ட படங்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றன. கல்வித்துறையில் உள்ள கறைகளால் சமீபத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். எனவே, இப்போது பாலிவுட்டுக்குச் செல்ல வேண்டாம். அடுத்து விஜய் சாரை இயக்கப் போவதாக அறிந்தேன். அந்தப் படம் வலிமையான சமூகக் கருத்து கொண்ட படமாக இருக்கட்டும் என்றார். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி!

ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் ஒரு படம்… உறுதியளித்த அஜித்!

ஹபீபி படத்தில் ஏ ஐ தொழில்நுட்பம மூலமாக மறைந்த பாடகர் நாகூர் ஹனிபாவின் குரலில் ஒரு பாட்டு!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் ‘டைட்டில்’ அறிவிப்பு… மீண்டும் ஒரு பேய்ப் படமா?

அடுத்த கட்டுரையில்
Show comments