Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.ஜே.பாலாஜியின் 'LKG' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (19:41 IST)
காமெடி நடிகர்கள் பலர் ஹீரோவாகிவிட்ட தமிழ் சினிமாவில் ஆர்.ஜே.பாலாஜியும் ஹீரோவாகிய படம் தான் ''LKG'. அரசியல் நையாண்டி திரைப்படமான இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இணையதள பயனாளிகளின் மாபெரும் வரவேற்பை பெற்றது.
 
இந்த நிலையில் இந்த படம் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் 'அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தேர்தல் தேதி அறிவிப்பு....! என அறிவித்ததோடு ரிலீச் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த போஸ்டரில் ஆர்.ஜே.பாலாஜியுடன் நாயகி ப்ரியா ஆனந்த் உள்ளார்.
 
பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
 
''LKG' வெளியாகும் அதே பிப்ர்வரி 22ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படமும் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments