Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது அஜித்தின் விவேகம் படப்பாடல்கள்; அனிருத் ட்வீட்!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (18:36 IST)
சிவா இயக்கத்தில் அஜித், அக்‌ஷராஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம், 'விவேகம்'. இந்தப் படத்துக்கான  பாடல்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. தற்போது இப்படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
 
 
‘விவேகம்’ படத்துக்காக முதலில் ரிலீஸான பாடல், ‘சர்வைவா’. யோகிபி பாடிய இந்தப் பாடல், வெளியான சில மணி  நேரங்களிலேயே வைரலானது. தற்போது படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது. அனிருத் தன்னுடைய டுவிட்டர்  பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார். அதோடு, தல அஜித்தின் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு படத்தின் பாடல்களை  சம்பர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு, ரிலீஸ் தேதிக்கு தயாராகி விட்டது. இந்நிலையில் விவேகம் படத்தின் பாடல்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. இதையடுத்து கடைகளிலும், டிஜிட்டல் வடிவத்திலும் இன்று பெற்றுக் கொள்ளலாம்.

 
இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து, விவேகா, யோகி பி, சிவா, ராஜ குமாரி உள்ளிட்டோர் பாடல்கள் எழுதியுள்ளனர். படமும் இம்மாதம் 24ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments