Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்டின் போது மேடம் செம்ம தூக்கம்... ராஷ்மிகா குறித்து மேனஜர் தகவல்!!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (15:54 IST)
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளில் ரெய்டு நடத்திய போது அவர் தூங்கிக்கொண்டிருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகிலும் பிரபலமானார். 
 
தொடர்ந்து டியர் காம்ரேட் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தவர், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் சரிலேரு நீக்கெவரு என்ற படத்திலும் நடித்துள்ளார். கார்த்தியுடனும் ஒரு படத்தில் நடித்து வௌகிறார். 
 
கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது சம்பளத்திற்கு அவர் சரியாக வருமானவரி செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. 
 
எனவே, பெங்களூரில் உள்ள ராஷ்மிகா மந்தனாவின் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஐ.டி துறையைச் சேர்ந்த சுமார் 10 அதிகாரிகள் ரெய்ட் நடத்தினர். காலை 7 மணியளவில் டுவங்கிய ரெய் சுமார் 4 மணி நேரம் நீடித்ததாம். 
 
ரஷ்மிகாவின் தந்தை மதன் மந்தண்ணா, வீட்டில் இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மடுட்மே ரெய்ட் அதிகாரிகளை எதிர்க்கொண்டுள்ளனர். ராஷ்மிகா ஹைதராபாத்தில் இருந்ததால், படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் வந்து தூங்கிவிட்டார். அவருக்கு ரெய்ட் குறித்து எதுவுமே தெரியாது என்று ராஷ்மிகாவின் மேனஜர் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments