Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வருங்கால கணவர் அவர்தான்.. போட்டுடைத்த ராஷ்மிகா! - யூகங்களுக்கு முடிவா?

Prasanth Karthick
திங்கள், 25 நவம்பர் 2024 (12:19 IST)

நடிகை ராஷ்மிகாவின் காதல் வாழ்க்கை குறித்து பல கிசுகிசுக்கள் நிலவி வரும் நிலையில் தனது வருங்கால கணவர் குறித்து அவர் வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

 

 

தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் ராஷ்மிகா. தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்தில் நாயகியாக நடித்தார். தற்போது இந்தியில் அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிஸியான நடிகையாகியுள்ளார் ராஷ்மிகா.

 

தற்போது அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ரிலீஸும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. அப்படியாக நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சினிமாத்துறையை தாண்டி வேறு நபரை திருமணம் செய்துக் கொள்வீர்களா?’ எனக் கேட்டார்.
 

ALSO READ: நாம எந்த மண்ணுல இருக்குறோமோ அந்த மொழிதான் பேசணும்… புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் கருத்து!
 

அதற்கு ராஷ்மிகா சிம்பிளாக ‘எல்லாருக்கும் அதை பற்றித் தெரியும்’ எனக் கூறியுள்ளார். ராஷ்மிகா மந்தனா சக நடிகரும் தனது பால்ய வயது தோழனுமான விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக பல காலமாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இவர்கள் டேட்டிங் சென்றதாக வெளியான புகைப்படங்களும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அது எல்லாருக்கும் தெரியும் என ராஷ்மிகா கூறியுள்ளது தங்களது உறவை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments