Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிகப்பெரிய பிளாப்பாக அமைந்த ரன்வீர் சிங்கின் ’83’!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (10:29 IST)
ரண்வீர் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவான 83 திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் அளவுக்கு நட்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக உலக கோப்பையை கடந்த 1983-ஆம் ஆண்டு வென்ற நிலையில் இந்த நிகழ்வை மையமாக வைத்து படம் ஒன்று உருவாகி உள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த திரைப்படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா நடித்துள்ளார். நேற்று வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று ஓடி வருகிறது.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வசூல் செய்யவில்லை என சொல்லப்படுகிறது. முதல் நாள் வசூல் சுமார் 13 கோடி ரூபாய் அளவுக்குதான் இருக்கும். இந்நிலையில் இந்த படத்தின் திரையரங்க வருமானம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் சுமார் 60 கோடி ரூபாய் அளவுக்குதான் தயாரிப்பாளர்களுக்கான பங்கு கிடைத்துள்ளதாம். அதே போல வெளிநாடுகளில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாம். திரையரங்கின் மூலமாக 130 கோடி ரூபாய் வசுலித்தால்தான் தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்ற நிலையில்  50 கோடி ரூபாய் அளவுக்கு தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments