Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேன் இந்தியா படத்தை இயக்கும் ராம்கோபால் வர்மா.. அமிதாப் முதல் ஃபஹத் வரை நடிக்கும் நடிகர்கள் லிஸ்ட்!

vinoth
வெள்ளி, 31 ஜனவரி 2025 (07:56 IST)
இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா.  ஒரு காலத்தில் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வந்த ராம்கோபால் வர்மா அதன் பின்னர் திசை மாறினார். பி கிரேட் படங்களை எல்லாம் எடுக்க ஆரம்பித்தார். இவர் இந்த லாக்டவுனில் வரிசையாக படங்களை இயக்கி தனது ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வருகிறார். இவரது படங்கள் எல்லாம் 18+ ஆக இருப்பதால் அனைவரும் பணம் கட்டிப் பார்த்து வருகின்றனர். இதனால் அவரும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

அதே போல சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சையாவது வாடிக்கையாகிவிட்டது. பாகுபாடின்றி அனைவரையும் காரசாரமாக விமர்சிப்பவர் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் கூட கேம்சேஞ்சர் படத்துக்காக ஷங்கரை நக்கல் செய்து பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பி கிரேட் படங்களாக எடுத்துத் தள்ளிய ராம்கோபால் வர்மா தற்போது மீண்டும் மெய்ன்ஸ்ட்ரீம் படம் ஒன்றை இயக்கவுள்ளார். அந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கடேஷ், அமிதாப் பச்சன் மற்றும் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படம்.. டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்..!

க்யூட்டோ க்யூட்… ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இன்னும் கல்யாண குஷி முடியல போல… ஆடிப்பாடி கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்!

'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments