Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு ராஜாவா நான் வாழுறேன் "ரகிட ரகிட ரகிட" CSK வெர்ஷன் !

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (14:49 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் உருவாகி வருகிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து தனுஷின் பிறந்த நாளில் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ‘ரகிட ரகிட ரகிட’ என்ற முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் தற்ப்போது இந்த பாடலின்  சென்னை சூப்பர் கிங்ஸ் வெர்ஷனை CSK அணி வெளியிட்டுள்ளதை படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டர் பகிர்ந்து CSK ரசிகரகளை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுளளார்.

தொடர்புடைய செய்திகள்

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

கதைகட்டுவது இதயத்தை நோகச்செய்கிறது… விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு சைந்தவி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments