Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவா திருமணம் செய்துகொண்டது உண்மையா? குடும்ப உறுப்பினர் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (15:51 IST)
நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா திருமணம் செய்துகொண்டது உண்மைதான் என அவரின் அண்ணன் ராஜு சுந்தரம் தெரிவித்துள்ளார்.

நடிகராகவும் நடன இயக்குனராகவும் அறியப்பட்ட பிரபுதேவா, ரமலத் என்ற டான்ஸரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவருக்கு திருமணம் ஆனதே 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் வெளி உலகுக்கு தெரியப்படுத்தினார். அவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இந்நிலையில் வில்லு படத்தின் உருவாக்கத்தின் போது நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டதால் ரமலத்துடனான உறவை முறித்துக் கொண்டார்.

பின்னர் நயன்தாராவுடனும் காதல் முறிவு ஏற்பட்டு அவர் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது முதுகுவலி பிரச்சனைக்காக சிகிச்சை மேற்கொண்ட அவர் அப்போது சிகிச்சை அளித்த மருத்துவருடன் காதல் வயப்பட்டதாகவும், அதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் எளிமையாக வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை நடன இயக்குனரும் பிரபுதேவாவின் அண்ணனுமான ராஜு சுந்தரம் உறுதிப்படுத்தியுள்ளார். பீகாரைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானி என்பவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும் இந்த திருமணத்தால் இருவரின் குடும்பத்தாரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி!

ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் ஒரு படம்… உறுதியளித்த அஜித்!

ஹபீபி படத்தில் ஏ ஐ தொழில்நுட்பம மூலமாக மறைந்த பாடகர் நாகூர் ஹனிபாவின் குரலில் ஒரு பாட்டு!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் ‘டைட்டில்’ அறிவிப்பு… மீண்டும் ஒரு பேய்ப் படமா?

அடுத்த கட்டுரையில்
Show comments