Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸில் மாற்றமா?

vinoth
வெள்ளி, 5 ஜூலை 2024 (07:41 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது அவர் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துறவியோடு பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் பல விஷயங்களை  பேசும் நிலையில் வேட்டையன் படம் பற்றியும் பேசியுள்ளார். அதில் வேட்டையன் திரைப்படம் தசரா பண்டிகையை முன்னிட்டு ரிலிஸாகும் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகியுள்ளது.

ஆனால் இந்த திரைப்படம் இப்போது அந்த தேதியில் இருந்து தள்ளிப் போய் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே அக்டோபர் 10 ஆம் தேதி சூர்யாவின் கங்குவா திரைப்படமும் போட்டிக்கு ரிலீஸ் ஆவதால் வேட்டையன் திரைப்படம் தீபாவளிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

அடுத்த கட்டுரையில்
Show comments