Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ரஜினியின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க ஆர்வம் ’’- பிரபல ஹிட் பட இயக்குநர் தகவல் !

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (16:40 IST)
சமீப காலமாகவே தமிழ் உள்ளிட்ட இந்திய சினிமாவில் அரசியல் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரரக்ள், விளையாட்டு வீரர்கள் , திரைத்துறையில் சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்துத் திரைப்படமாக எடுக்க முயற்சிகள்செய்துவருகின்றனர். இதில் சாவித்ரி போன்ற படங்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான ரஜினியின் வாழ்கை வரலாற்றுக் கதையை சினிமாவாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இயங்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நான் இதுவரை யாருடைய  வாழ்க்கைக் கதையையும் படமாக எடுக்க முயற்சித்ததில்லை. ஆனால் ரஜினிகாந்த்தின் வாழ்க்கையைப் படமாக எடுக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது.

நான் இதற்காக முயற்சித்து வருகிறேன்…ஏனென்றால் ஒரு   படத்திற்குத் தேவையான அனைத்துச் சுவாரஸ்யங்களும் ரஜினியின் வாழ்க்கையில் உள்ளன.

நான் அவரது தீவிர ரசிகன் என்பதால் அவரது அவரது நடிப்பும், ஷ்டைல் உள்ளிட்ட அனைத்தும் பிடிக்கும், குறிப்பாக அவர் வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து வந்துள்ளவர், நல்ல குடும்பப் பின்னணி கொண்டவர், ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டவர். எனவே அவரது வாழ்க்கைப் படம்  இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் குறிப்பாக தனுஷிற்கு ரஜினியின் கதாப்பாத்திரம் பொருந்திப் போகும்…எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments