Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் காலா படத்தில் கலக்கவரும் நான்கு தேசியவிருது பெற்ற பிரபலங்கள்!

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (15:51 IST)
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. `காலா' கரிகாலன் என்ற பெயரில் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன், படத்தில் அவரை `காலா' என்று அழைப்பார்கள் என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

 
 
காலா படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படம் வரும் மே 28-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மும்பை செல்கிறார்.
 
இதுஒருபுறம் இருக்க `காலா' படக்குழுவில் தேசிய விருது பெற்ற 4 பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
* தயாரிப்பாளர் தனுஷ் - நடிப்பு - `ஆடுகளம்', தயாரிப்பு - `காக்கா முட்டை', `விசாரணை'.
 
* எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் - `ராக்', `ரக் பிராக்', `நாக்கா கரிட்ராமு', `தி டெரரிஸ்ட்', `வானபிரசாதம்', `கண்ணத்தில் முத்தமிட்டாள்',  `ஃபிராக்' உள்ளிட்ட 7 படங்களில் சிறந்த எடிட்டராக தேசிய விருது பெற்றிருக்கிறார்.
 
* நடிகை அஞ்சலி பாட்டீல் - `நா பங்காரு தள்ளி' என்ற படத்திற்காக சிறப்பு தேசிய விருது பெற்றிருந்தார். 
 
* நடிகர் சமுத்திரக்கனி - சிறந்த துணை நடிகராக `விசாரணை' படத்திற்கு தேசிய விருது பெற்றிருந்தார். 
 
சண்டைப் பயிற்சியாளராக ‘அட்டகத்தி’யில் பணியாற்றிய திலீப் சுப்பராயன் பணியாற்ற இருக்கிறார். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் பணியாற்ற இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும்  நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. `காலா' குறித்த முழு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் என் மேல் ‘அதற்காக’ அதிருப்தியில் இருக்கலாம்.. வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

வெற்றிமாறன் எனும் மாஸ்டர் பில்ம்மேக்கர்… ‘விடுதலை 2’ படத்தைப் பாராட்டிய தனுஷ்!

சூர்யா 4 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு எப்போது?... அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்!

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments