Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு உதவி செய்த ரஜினி - ரூ.1 கோடியில் பரிசு!

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (13:23 IST)
தமிழ் திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை,  சினிமாவை அத்துப்படியாக அறிந்த ஞானி,  பல கனவு நாயகன்களும், நாயகிகளும் புகழின் உச்சத்திற்கு செல்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பிரம்மா என போற்றப்படுபவர் தயாரிப்பாளர் கலைஞானம். 


 
இவரை இந்த அளவிற்கு புகழ்வதற்கு காரணம், தன் சினிமா பயணத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்ககுல்லு திரைக்கதை எழுதி,  40 படங்களுக்கு கதை எழுதி, 18 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகர், பாடலாசிரியர், கதையாசிரியர் என  சினிமாவில் எவரும் எளிதில் எட்டமுடியாத சாதனைகளை தொட்டு சாதித்துள்ளார். 
 
இப்பேற்பட்ட  ஜாம்பவானை பெருமை படுத்தும் விதத்தில் சமீபத்தில் கலைஞானத்துக்கு  பாராட்டு விழா நடத்தினர்.  அதில் பழம்பெரும் சினிமா பிரபலங்ககள் பலரும் கலந்துகொண்டனர். குறிப்பாக  ரஜினிகாந்த், சிவகுமார், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டு கலைஞானத்தின் திரைப்பயணத்தை பாராட்டினார். 
 
அப்போது பேசியர் நடிகர் சிவகுமார், கலைஞானம் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்த வீடு கட்டுவதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்’ என்று கூறினார். அவரையடுத்து பேசிய ரஜினிகாந்த், "அந்த வாய்ப்பை அரசுக்கு தரமாட்டேன். விரைவாக கலைஞானம் அவர்களுக்கு வீடு பாருங்கள்.. 10 நாட்களுக்குள் பணத்தை தருகிறேன்’ என்று கூறி வாக்குக்கொடுத்தார்.
 
இதற்காக  இயக்குனர் பாரதிராஜா 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை தேடிப்பிடித்ததகாவும்,  ரஜினி மொத்த பணத்தையும் கொடுத்து வீடு வங்கியுள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால், நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ள தகவலின் படி.  வீடு தேடிக்கொண்டு இருப்பதாகவும் தகவல் வருகிறது. ரஜினி இந்த வீட்டுக்காக 1 கோடி ரூபாய் கூட கொடுக்க தயார் என்று கூறியதாகவும் சொல்கிறார்கள்.


 
இது குறித்து பேசிய கலைஞானம் , ரஜினிக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அவருடைய முதல் பட வாய்ப்பை நான் அளித்தேன். அவ்வளவுதான். ஆனால்  எனக்கு எவ்வளவு பெரிய உதவியை ரஜினி செய்துள்ளார். இது அவருடைய பரந்த மனதை வெளிப்படுத்துகின்றது, என்று மனம் நெகிழ்ந்து பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடில வர்றதுக்கு முன்னாடியே லால் சலாம் HD ப்ரிண்ட் இணையத்தில் லீக்!

அழகேஅஜித்தே… புது ஸ்லோகனை அறிமுகப்படுத்திய பிரசன்னா.. இனிமே இதப் புடிச்சுக்குவாங்களே!

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments