Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு 35 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்த ரஜினி

Webdunia
புதன், 30 மே 2018 (19:28 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் டேராடூனில் தொடங்க இருக்கிறது. 


ஜூன் 4ஆம் தேதி தொடங்கும் படப்பிடிப்புக்காக, நாளை சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்கிறது படக்குழு. சென்னையில் இருந்து மட்டுமே கிட்டத்தட்ட 200 பேர் வரை செல்கின்றனர்.
 
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர்.
 
ரஜினிக்கு ஜோடியாக சிம்ரனும், தங்கையாக அஞ்சலியும் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக 35 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரஜினி.
ரஜினி நடித்துள்ள ‘காலா’, வருகிற ஜூன் 7 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தைத் தனுஷ் தயாரிக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. மும்பை, தாராவியில் வாழும் தமிழர்களைப் பற்றி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments