Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை வைத்து தரமான சம்பவம் செய்த கார்த்திக் சுப்பராஜ் ?

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2019 (12:33 IST)
நேற்று ரஜினி நடிப்பில் உருவானப் பேட்ட படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ரஜினி நடிப்பில் நேற்று வெளியான படம் ரஜினி ரசிகர்களிடையே மிகச்சிறப்பான வரவேற்பும் பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 90 களின் பழைய எனர்ஜிட்டிக்கான ரஜினியை மீண்டும் காட்டியதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜைப் புகழ்ந்து வருகின்றனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ரகளையாக செல்லும் பேட்ட படத்தில் சாதி, மத ஆனவக்கொலைகளுக்கு எதிராக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். வில்லன் நவாஸுதீன் சித்திக் இந்துத்வா சிந்தனைக் கொண்டவராகவும் அவரது கட்சி தொண்டர்களை கலாச்சாரக் காவலர்களாகவும் சித்தரித்துள்ளார். குறிப்பாக நவாஸுதின் சித்திக் மற்றும் விஜய் சேதுபதியின் தோற்றம் இந்துத்வா தலைவர்களைப் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

வில்லன் மற்றும் அவரது ஆட்களின் சித்தரிப்புகள் அனைத்தும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் காரர்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதால் பாஜக தொண்டர்களிடையே சிறிய அதிருப்தி  உண்டாகியுள்ளது.

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான காலா விலும் இதுபோல மோடி மற்றும் பாஜக வின் மனுதர்மத்திற்கு எதிராகப் பல கருத்துகள் இடம்பெற்றிருந்தன. நிஜத்தில் பாஜக வோடும் அதன் தலைவர்களோடும் நெருக்கமான நட்பில் இருக்கும் ரஜினி தொடர்ந்து படங்களில் பாஜகவையும் அதன் செயல்களையும் விமர்சித்து வருவது ரஜினி ரசிகர்களுக்கே  குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிகான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்: பவன் கல்யாண் அறிக்கை..!

உறுதியான அட்லி & அல்லு அர்ஜுன் படம்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் லெனின் பாரதி!

சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் அந்த வித்தியாசமான முயற்சியா?

சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த CSK vs RCB போட்டிக்கான டிக்கெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments