Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீவா & ராஜேஷ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இவர்தான் – கைகொடுக்குமா வெற்றிக் கூட்டணி!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (15:23 IST)
நடிகர் ஜீவா எஸ் எம் எஸ் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் உருவான நகைச்சுவை இயக்குனர்களில் எம் ராஜேஷ் குறிப்பிடத்தகுந்த ஒருவர். அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆனால் ஒரு மசாலா கதையை திரும்ப திரும்ப அவர் எடுத்ததால் அதற்கடுத்து எடுத்த எல்லா படங்களும் படுதோல்வி அடைந்தன.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் தனது முதல் பட நாயகனான ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்துக்கு நிதி உதவிகளை பைனான்சியர் பங்கஜ் மேத்தா என்பவர் செய்ய உள்ளாரம். இவர்தான் ராஜேஷ் சந்தானம் இணைய இருந்த படத்தை தயாரிப்பதாக இருந்தார். ஆனால் அந்த படம் ட்ராப் ஆனதால் இப்போது இந்த படத்துக்கு உதவி செய்கிறாராம். தொடர் தோல்வி படங்களாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் ராஜேஷ் மற்றும் ஜீவா இருவருக்குமே ஒரு வெற்றி தேவைப்படும் நிலையில் இந்த படம் திருப்பு முனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments