Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கை தவிர்த்த லாரன்ஸ் - தமிழ்ப்பட நிறுவனத்துக்கு படம் இயக்குகிறார்

Webdunia
வியாழன், 4 ஜூன் 2015 (14:38 IST)
ராகவா லாரன்ஸ் இயக்குனரானது தெலுங்கில். தொடர்ந்து தெலுங்கில்தான் படம் இயக்கி வந்தார். விதிவிலக்கு காஞ்சனா.
 
தெலுங்கில் அவர் கடைசியாக இயக்கிய ரிபெல் படுதோல்வியடைந்தது. அந்த தோல்வியை முன்னிட்டு தெலுங்குப் பட உலகமே அவருக்கு எதிராக திரும்பியது. பட்ஜெட்டைவிட அதிகம் செலவளித்தார் என்ற ரிபெல் தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு செவிகொடுத்த தெலுங்கு திரையுலகம், லாரன்ஸ் சில கோடிகள் தயாரிப்பாளருக்கு தர வேண்டும் என உத்தரவு போட்டது.
 
அந்த தோல்வியிலிருந்து மீள அவர் எடுத்த படம்தான், காஞ்சனா 2. அப்படத்தை தெலுங்கில் கங்கா என்ற பெயரில் வெளியிட்டார். அங்கும் படம் ஹிட்.
 
இந்த வெற்றியைத் தொடர்ந்து வேந்தர் மூவிஸுக்கு ஒரு படம் இயக்கி நடித்துத் தருகிறார் லாரன்ஸ். தெலுங்கு ஆஃபர்களை ஒதுக்கி வைத்து இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டுள்ளார். தமிழில் தயாராகும் இந்தப் படத்தை தெலுங்கிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
 
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments