Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுபடியும் ரூ.25 லட்சம் நிதியுதவி செய்யும் ராகவா லாரன்ஸ்! ரூ.4 கோடியை நெருங்குகிறது

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (11:20 IST)
நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே. அதன் பின்னர் மீண்டும் ரூபாய் 25 லட்சம் தூய்மை பணியாளர்களுக்கும், 15 லட்சம் சென்னை செங்கல்பட்டு வினியோகஸ்தர் சங்கத்திற்கும் அளித்தார் என்பது குறித்து செய்தியை பார்த்தோம்
 
எனவே ராகவா லாரன்ஸ் இதுவரை கொடுத்த நிதி உதவி ரூபாய் 3 கோடியே 40 லட்சம் என ஆகி உள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ரூபாய் 25 லட்சம் நிதியுதவி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். சற்றுமுன் தனக்கு நடிகர் உதயா ஒரு வீடியோவை அனுப்பியதாகவும் அந்த வீடியோவில் நலிந்த நாடக நடிகர்கள் பலர் கஷ்டப்படுவதை பார்த்து மிகவும் கஷ்டப்பட்டதாகவும், இதனையடுத்து உடனடியாக நலிந்த நடிகர்களுக்காக ரூபாய் 25 லட்சம் நிதி உதவி செய்வதாகவும் அறிவித்துள்ளார்
 
இதனை அடுத்து அவர் செய்த மொத்த நிதி உதவி ரூபாய் 3.65 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழ் நடிகர் ஒருவர் ரூபாய் 4 கோடியை நெருங்கும் அளவிற்கு நிதி உதவி செய்து கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதுமட்டுமின்றி இன்னும் அவர் பல லட்சங்களை உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments