Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சிவகார்த்திகேயன், விஷாலோடு இணைந்து ஹிட் கொடுத்தார்… இப்போ?” – ஜிகர்தண்டா 2 குறித்து ராகவா லாரன்ஸ்!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:38 IST)
2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் முந்தைய பாகத்துக்கும் இப்போது உருவாகும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். படம் பீரியட் திரைப்படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்துள்ள நிலையில் தீபாவளிக்குப் படம் ரிலீஸ் ஆகிறது.

நேற்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மாமதுர என்ற பாடல் ரிலீஸ் ஆனது. அதையொட்டி சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது படம் சம்மந்தப்பட்ட பல சுவாரஸ்யமான தகவல்களைப் பேசினார் ராகவா லாரன்ஸ். அதில்”எஸ் ஜே சூர்யா சார், சிவகார்த்திகேயனோடு இணைந்து ஹிட் கொடுத்தார், விஷாலோடு இணைந்து ஹிட் கொடுத்தார். இப்போது என்னோடு இணைந்து ஹிட் கொடுக்க வுள்ளார். 100 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments