ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தில் ஷூட்டிங் தாமதம்… பின்னணி என்ன?

vinoth
வியாழன், 18 செப்டம்பர் 2025 (10:09 IST)
லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை தன்னுடைய LCU உலகத்தில் இணைக்கும் விதமாக கதையை எழுதியுள்ளார் லோகேஷ். கடந்த ஆண்டே இந்த படம் அறிவிக்கப்பட்டு விட்டாலும் தற்போதுதான் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நிவின் பாலி மற்றும் மாதவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். அதே போல கதாநாயகிகளாக பிரியங்கா மோகன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்த படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்புத் தொடங்கவில்லை. இந்த படத்துக்காக 50 லட்ச ரூபாய் செலவில் ஒரு செட் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறதாம். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் நிதிப் பிரச்சனை காரணமாக ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மரணம்!.. சூப்பர்ஸ்டார் நேரில் அஞ்சலி!..

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments