Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர் சலூன் படத்துக்கு இவ்வளவு டிமாண்டா? கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!

vinoth
செவ்வாய், 16 ஜனவரி 2024 (07:26 IST)
ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் அவர் சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் கோகுலுக்கும், ஆர் ஜே பாலாஜிக்கும் கருத்து மோதல் எழுந்து பிரச்சனை உண்டானதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஷூட்டிங் முடிந்தும் இருவருக்கும் இடையிலான பிரச்சனை தீரவில்லை என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்த படம் ஜனவரி 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை 6 கோடி ரூபாய் கொடுத்து கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாம். ஆர் ஜே பாலாஜி படங்களில் மிகப்பெரிய தொகைக்கு விலைபோன படம் என்ற பெருமையை சிங்கப்பூர் சலூன் திரைப்படம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments