Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி ரூ.1000 கோடியை மட்டும் வசூலிக்கவில்லை - ஆர்.ஜே.பாலாஜி அதிரடி

Webdunia
திங்கள், 8 மே 2017 (10:59 IST)
பாகுபலி படத்தை இயக்கிய ராஜமௌலியை, பிரபல ரேடியோ தொகுப்பாளரும், நடிகருமாகிய ஆர்.ஜே.பாலாஜி பாராட்டித்  தள்ளியுள்ளார்.


 

 
பாகுபலி படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் உலக அளவில் சினிமா ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமில்லாமல்,  இதுவரை  ரூ.1000 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
 
இந்நிலையில் இதுபற்றி தன்னுடை சமூக வலைத்தள பக்கங்களில் கருத்து தெரிவித்துள்ள ஆர்.ஜே. பாலாஜி “ பாகுபலி படம் ஆயிரம் கோடி தாண்டி வசூலித்திருக்கிறது. படத்தின் இயக்குனர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். நான் சிறு வயதிலிருந்து சினிமா பார்த்துதான் வளர்ந்தேன். சென்னை சத்யம் தியேட்டரிலும், ஸ்டார் மூவில் தொலைக்காட்சிகளிலும் ஹாலிவுட் படங்களை பார்க்கும் போது, இந்திய திரைப்படங்கள் அதை விட்டு வெகு தூரம் இருப்பதாக தோன்றும். அது போன்ற படங்களை எடுக்க இங்கு யார் இருக்கிறார்கள் என எனக்குள் கேள்விகள் எழும்பும். இதுபற்றி நான் மற்றவர்களிடம் விவாதிக்கும் போது, ஹாலிவுட் பட்ஜெட் அதிகம், உலக அளவில் நமக்கு மார்கெட் இல்லை, மேலும், ஹாலிவுட் போல் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள் இங்கு இல்லை எனவேதான், தமிழ் சினிமாக்களை உலக தரத்திற்கு எடுக்க முடியவில்லை எனக் கூறுவார்கள். ஆனால், தற்போது மாற்றப்பட்டுள்ளது.  ஒருவரின் கனவு மூலம் ஒரு புதிய வரலாறு உருவாகியுள்ளது. 


 

 
வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சினிமா ரசிகர்களுக்கு, பாகுபலி போன்ற படத்தை எடுக்க முடியும் என்று காட்டிய உங்களுக்கு என் நன்றி. உங்கள் படக்குழுவின் அபார உழைப்பு உங்களை கனவை நினைவாக மாற்றியிருக்கிறது. இந்த படம் ரூ.1000 கோடியை மட்டும் வசூலிக்கவில்லை, உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களின் அன்பு, மரியாதை மற்றும் விருப்பத்தை இந்தப்படம் சம்பாதித்துள்ளது.  எங்களை பெருமைபடுத்தும் விதமாக பாகுபலி படத்தை எடுத்த உங்களுக்கு எங்கள் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முன்னாள் மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்!

இன்னும் 10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது… இசையமைப்பாளர் யுவன் கருத்து!

லாபட்டா லேடீஸ் ஆஸ்கருக்கு செல்வதை ஏற்றுகொள்ள முடியாது… அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதங்கம்!

திருப்பதி லட்டு சம்மந்தமான பரிதாபங்கள் வீடியோ நீக்கம்… மன்னிப்பு கேட்ட கோபி & சுதாகர்!

தமிழகத்தின் அனைத்து நகரங்களில் இசை நிகழ்ச்சி.. இளையராஜா அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments