Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”குடும்பத்தோட வாங்க”… அடுத்த படத்தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்த ஆர் ஜே பாலாஜி!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (09:36 IST)
நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் பதாய் ஹோ ரீமேக் படத்தின் தலைப்பு மற்றும் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. வீட்டில் கல்யாண வயதில் மகளும் மகனும் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு பாக்யராஜ் படத்தின் தலைப்பான வீட்ல விஷேசங்க என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. வீட்ல விஷேசம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜுன் 17 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் ஊர்வசிக்கு வளைகாப்பு நடத்துவது போலவும் அவரை சுற்றி குடும்பத்தினர் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments