Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்புத்தூரில் தொடங்கும் ஆர்ஜே பாலாஜி பட ஷுட்டிங் பணிகள்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (09:50 IST)
பதாய் ஹோ படத்தின் ரீமேக்கில் ஆர் ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. வீட்டில் கல்யாண வயதில் மகளும் மகனும் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். போனி கபூர் தயாரிக்க உள்ளார்.இந்த படத்துக்கு பாக்யராஜ் படத்தின் தலைப்பான வீட்ல விஷேசங்க என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடிக்க உள்ளாராம். இதில் திருமண வயதில் மகனும் மகளும் இருக்கும் நிலையில் கர்ப்பமாகும் முதிய பெண்ணாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் நடப்பதால் அந்த வீட்டின் செட் பணிகள் இப்போது கோயம்புத்தூரில் நடந்து வருகிறதாம். கிட்டத்தட்ட 35 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட்ரோ படத்தின் இசை & டிரைலர் வெளியீட்டு விழா தேதியை அறிவித்த படக்குழு!

நீ மறைந்திருக்கலாம்… ஆனால் மறக்கப்படவில்லை – தங்கை குறித்து உருக்கமாகப் பதிவிட்ட சிம்ரன்!

குட் பேட் அக்லி கொண்டாட்டம் முடியும் முன்னரே அஜித் ரசிகர்களுக்கு வந்த அடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்