Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவயானியின் சீரியலில் RJ பாலாஜி & அபர்ணா… வெளியான புது ப்ரோமோ!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (10:52 IST)
வீட்ல விசேஷம் படத்துக்காக படக்குழுவினர் வித்தியாசமாக ப்ரமோஷன்களை செய்து வருகின்றனர்.

வீட்டில் கல்யாண வயதில் மகன் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு  வீட்ல விஷேசம் என்ற தலைப்பை வைத்துள்ளனர். படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

இந்நிலையில் ஜூன் 17 ஆம் தேதி படம் வெளியாவதை அடுத்து படக்குழுவினர் ப்ரோமோஷனுக்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேவயானி நடிக்கும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்துள்ளனர். பட வெளியீட்டுக்கு முன்பு அவர்கள் நடித்த எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தற்போது புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் தேவயானியுடன் பாலாஜி மற்றும் அபர்ணா பாலமுரளி இடம்பெறும் காட்சிகளின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RJ Balaji (@irjbalaji)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகிய உடையில் கேட்வாக் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

வித்தியாசமான காஸ்ட்யூமில் க்யூட்டான போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்தடுத்து மாஸ் படங்களில் கமிட்டாகும் சாய் அப்யங்கர்… சிம்பு படத்துக்கும் அவர்தானாம்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கைக் குறைவு.. பேட் கேர்ள் சர்ச்சை குறித்து மிஷ்கின் பேச்சு!

என்னுடைய காதலர் இவர்தான்.. காதலர் தினத்தில் அறிவித்த பிக்பாஸ் ஜாக்குலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments