Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபஹத் பாசில் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட புஷ்பா 2 படக்குழு!

vinoth
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (16:12 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 15 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இதற்குக் காரணம் ஷூட்டிங் சம்மந்தமாக இயக்குனர் சுகுமாருக்கும், அல்லு அர்ஜுனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் காரணம் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வரும் நிலையில் இன்று படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பஹத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரிருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mythri Movie Makers (@mythriofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்துஜா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

தமிழ்ப் படம் புகழ் ஐஸ்வர்யா மேனனின் கார்ஜியஸ் போட்டோஸ்!

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மெட்ராஸ்காரன் படக்குழுவினர்!

விடாமுயற்சி பார்த்துவிட்டு அஜித் சார் இதைதான் சொன்னார்… மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘டாம்னிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments