Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு சேரனின் 9 கேள்விகள்

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (17:19 IST)
ஜனவரியில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது நிர்வாகத்தில் இருக்கும் தாணு தலைமையிலான அணியை எதிர்த்து விஷால் தலைமையிலான அணி களம் இறங்குகிறது.

 
இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் முன், தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் 9 கேள்விகள் கேட்டு அதற்கு அவர்கள் தரும் பதிலை வைத்து முடிவெடுக்கும்படி வாட்ஸ் அப்பில் இயக்குனர் சேரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
சேரனின் பதிவு இதுதான்...
 
தயாரிப்பாளர் நண்பர்களே, மூத்த தயாரிப்பாளர்களே… ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் நமது பிரச்னைகள் குறித்து பேசுவதும் எல்லா பிரச்னைக்கும் தீர்வு காண இதுவே சரியான கூட்டணி என முடிவு செய்து அவர்களுக்கு வாக்களிப்பதும் பின்னர் இரண்டு வருடங்கள் காத்திருந்து ஒன்றுமே செய்யவில்லை என புலம்பித் தள்ளுவதும் நமக்கு வாடிக்கையாக ஆகிவிட்டது.
 
வரும் தேர்தலிலும் அதையே செய்யப்போகிறோமா… சற்று சிந்திக்கலாம்… இதற்கு முன்னர் இருந்த பிரச்னைகள் அப்படியேதான் இருக்கிறது.. இல்லை இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது…. அதற்கு என்ன மாற்றுவழி… எனது சிந்தனைகள் தயாரிப்பாளர் என்ற முறையில்…
 
இந்த முறை தேர்தலுக்கு முன் யார் யார் போட்டியிடபோகிறார்களோ அவர்களிடம் நமது தயாரிப்பாளர்கள் அனைவரும் இருக்கும் சபையில் கீழ்கண்ட கேள்விகளை முன் வைக்கவேண்டும் .. அதற்கு அவர்களின் விளக்கமும் திறனும் தெளிவும் என்ன என்று தெரிந்த பின்னரே வாக்களிக்க வேண்டும்…
 
நமது கேள்விகள்..
 
1) இதுவரை தயாரிப்பாளர்களாகிய நாம் சந்தித்து கொண்டிருக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் உங்களிடம் என்ன தீர்வு இருக்கிறது… என்ன என்ன பிரச்னைகள் இருப்பதாக அதை தீர்ப்பதாக நீங்கள் உறுதி கொடுக்கப்போகிறீர்கள்..
 
2) இந்த பிரச்னைகள் தீர்க்க முடியாதபடி முன்னால் நமது தலைமைக்கு அல்லது நமது சங்கத்திற்கு இருந்த தடைகள் என்ன என்ன..
 
3) அந்த தடைகளை நீங்களும் உங்கள் அணியினரும் எப்படி களைய முடியும் என நினைக்கிறீர்கள்..?
 
4) அதற்கான செயல்முறை என்ன இருக்கிறது.. அந்த திட்டத்தை எங்களுக்கு சொல்லமுடியுமா…?
 
5) இந்த பிரச்னைகளை தீர்வு கண்டு செயல்படுத்தி செய்து முடிக்க உங்களுக்கு எவ்வளவு காலகட்டம் தேவைப்படும்?
 
6) நீங்கள் குறிப்பிட்டது போல திட்டம் செயல்படுத்த எந்தமாதிரியான ஒத்துழைப்பு தயாரிப்பாளர்களிடம் இருந்து உங்களுக்கு தேவை..?
 
7) நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் நீங்களே குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செய்து முடிக்கவில்லையெனில் உங்கள் நிலை என்ன…?
 
8) தயாரிப்பாளர்களின் தொழில் சிறக்க உயர அடுத்த கட்டத்திற்கு நமது தொழிலை எடுத்துச்செல்ல உங்களிடம் உள்ள புதிய சிந்தனைகள்இ திட்டங்கள் என்ன என்ன…?
 
9) நமது சங்கத்திற்காவும் நமது தயாரிப்பாளர் நலனுக்காகவும் உழைக்க இரண்டு வருடங்கள் உங்களை அர்ப்பணிக்க தயாராகும் நீங்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து மாற்றாக என்ன எதிர்பார்க்கிறீர்கள்…?
 
இப்படி சில முக்கியமான கேள்விகளை முன்வைத்து அதற்கான சரியான நடைமுறைப்படுத்தக்கூடிய பதில்களை யார் தருகிறார்களோ அவர்களுக்கே நமது வாக்குகளை கொடுக்க தேர்ந்தெடுக்க நாம் தயாராகவேண்டும்…. எப்போதும் போல மறுபடியும் சிந்திக்காமல் சோதிக்காமல் வாக்களிப்போமேயானால்….. அந்த ஆண்டவனே வந்தாலும்…….
 
No chance….
 
குதர்க்கம் இன்றி எடக்குமடக்காக பதில் சொல்லாமல் முறையாக இதைப்பற்றி கருத்து பதிவு செய்யுங்கள்… கூடுதல் கருத்துக்களை தெரிவியுங்கள்..
 
பின்குறிப்பு் - நான் தலைவனாகும் எண்ணத்துடன் இதை பதிவுசெய்யவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் ‘காதலிக்க நேரமில்லை’… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

‘மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்கிற போர்வையில்…’ -வணங்கான் படத்தை விமர்சித்த லெனின் பாரதி!

கும்பமேளாவில் நடக்கவுள்ள பாலையாவின் ‘அகாண்டா 2’ படப்பிடிப்பு!

விடாமுயற்சி கதைத் திருட்டு சர்ச்சைக்கு முடிவு… விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கேம்சேஞ்சர் படத்தைக் கலாய்த்து பதிவிட்ட ராம் கோபால் வர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments