Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.48 கோடியில் சொகுசு பங்களா - பிரியங்காவிற்கு பரிசளித்த காதலர்

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (16:34 IST)
ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது சிறியவர் ஆன அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனசுடன் காதல் வயப்பட்டார்.  

 
பிறகு இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் மும்பையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்த வருடம் இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று செய்தி வந்துள்ளது.

 
இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு பிரியங்காவுடன் வசிப்பதற்காக அமெரிக்கா பெவர்லி பகுதியில் ரூ.48 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆடம்பர பங்களாவை நிக் விலைக்கு வாங்கியுள்ளார். அந்த பங்களா பள்ளத்தாக்கின் சரிவில் கட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தும் முதல் தரத்தில், கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளதாம். மலைகள் சூழ இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அந்த வீட்டை தேடிப்பிடித்து நிக் வாங்கியுள்ளாராம்.  இந்த வீட்டை தனக்கு காதலர் கொடுத்த மிகப்பெரிய பரிசாக கருதுகிறாராம் பிரியங்கா சோப்ரா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

டிராகன் படம் ரிலீஸாவதற்கு முன்பே சிம்பு கொடுத்த விமர்சனம்!

ரசிகர்களை படத்துக்கு வரவழைக்க முதல் படத்தின் விளம்பரத்திலேயே வித்தியாசம் காட்டிய பார்த்திபன்…!

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments