Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (10:24 IST)
முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்.  இருவரும் திருமணத்துக்கு தயாராகி வருகிறார்கள் 
 
கடந்த ஜூலை மாதம் மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் ஜோத்பூரில் அடுத்த மாதம் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடியேறுகிறார். 
 
இதற்காக அங்குள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றை, நிக் ஜோன்ஸ் விலைக்கு வாங்கி உள்ளார். திருமணத்தை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பதிவு செய்ய உள்ளார் பிரியங்கா சோப்ரா. அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் திருமண உரிமை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை இருவரும் சமர்ப்பித்து உள்ளனர். 
 
இந்த நிலையில் திருமண புகைப்படங்களை பிரபல நிறுவனம் ஒன்று 2.5 மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய பண மதிப்பில் சுமார் ரூ.18.25 கோடி ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அமெரிக்காவில் செம்ம ஹிட்டடித்த ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்… வசூல் எவ்வளவு தெரியுமா?

இன்றைய ஓடிடி ரிலீஸ்கள்…எந்தந்த தளங்கள்… என்னென்ன படங்கள்?

இன்னும் 50 நாட்கள்… ரிலீஸ் குறித்த அப்டேட்டுடன் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Waiting இயக்குனரே… கருப்பு படத்தின் எதிர்பார்ப்பை ஏற்றிய சூர்யாவின் பதிவு!

அடுத்த கார் ரேஸ் பந்தயத்துக்குத் தயாரான அஜித் குமார்… வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்