Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப் பாடகரை கரம்பிடிக்கும் பிரியங்கா சோப்ரா! - மும்பையில் நிச்சயதார்த்தம்

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (08:27 IST)
பாலிவுட், ஹாலிவுட் என மிக பிசியாக நடித்து வரும் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இவருக்கு 35 வயது ஆகிறது. இவர் இந்த வருடத்தின் தொடக்கதிலிருந்தே அமெரிக்கவை சேர்ந்த  25 வயது பாப் பாடகர் நிக் ஜோனஸ்ஸை காதலித்து  வருவதாக கிசு கிசு தகவல்கள் வெளியாகிவந்தன;  இவர்கள் காதலை இரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டனர். இதனால் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்று வருகிறார்கள். 

 
இந்த நிலையில், சில நாள்கள் முன், நிக் இந்தியா வந்து பிரியங்காவின் அம்மா மது சோப்ராவையும் பிரியங்காவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களையும் சந்தித்தார். அதன் பிறகு, நேற்று நிக்கின் பெற்றோர் டெனிஸ் மற்றும் கெவின் ஜோன்ஸ் நேற்று முன்தினம் இந்தியா வந்தனர். அவர்கள் முதல்முறையாகப் பிரியாங்காவின் குடும்பத்தையும் உறவினர்களையும் சந்தித்தனர்.

 
நேற்று மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் காதலர்கள் இருவருக்கும் இந்திய முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
 
பே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டும் நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். கடந்த வருடம் போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்து இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்