Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் ஹீரோவுடன் நடிக்க, உள்ளூர் ஹீரோவுக்கு கல்தா கொடுத்த பிரியங்கா சோப்ரா

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (18:13 IST)
ஹாலிவுட்டில் கவனம் செலுத்துவதால் பாலிவுட் படமான பாரத் படத்தில் இருந்து பிரியங்கை சோப்ரா விலகியுள்ளார்.



பாலிவுட்  முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா 'பே வாட்ச்' எனும் படத்தின் மூலம் ஹாலிவுட் திரைவுலகுக்கு அறிமுகமானார். இதன் பின் குவன்டிகோ சீரியஸில் நடித்தார்.
அதன் பின்னர் 'எ கிட் லைக் ஜேக்' படத்தில் நடித்தார். அடுத்ததாக 'இஸ் இன்டிட் ரொமான்டிக்' படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், சல்மான்கான் நடிக்கும் பாரத் எனும் ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அடுத்த மாதம் படத்தின் படபிடிப்புகள் ஆரம்பிக்கும் நிலையில், தற்போது அவர் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. நிக் ஜோன்ஸ் உடன் விரைவில் திருமண செய்ய உள்ளதால் பாரத் படத்தில் இருந்து விலகினார் என தகவல் பரவியது.

ஆனால் அப்பா இறந்த சில நாட்களிலேயே படப்பிடிப்பில் கலந்து கொண்டு படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்தவர் ப்ரியங்கா. அப்படி இருக்க திருமண நிச்சயதார்த்தத்தினால் படதில் இருந்து விலகி இருக்க மாட்டாரே என குழப்பத்தை தந்தார்.ஆனால் உண்மை நிலவரம் என்னவோ இப்போதுதான் தெரிய வந்துள்ளது.ஹாலிவுட் கேம் ஆப் த்ரோன்ஸ் புகழ் மிஷல் மெக்லாரன் இயக்கும் ஹாலிவுட் படம் கவ்பாய் நிஞ்சா வைக்கிங். கிறிஸ் பிராட் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ப்ரியங்கா சோப்ரா.

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த படத்தில் கிறிஸ் பிராட்டின் காதலியாக நடிக்கிறார் ப்ரியங்கா. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகர்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை… ஷங்கரின் கருத்துக்கு அனுராக் காஷ்யப் பதில்!

கேம்சேஞ்சர் படம் தோற்றது இதனால்தான்… தில் ராஜு சொன்ன காரணம்… ஏற்றுக்கொள்வாரா ஷங்கர்?

சிம்பு & ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

என்னுடைய படத்தில் சாய் பல்லவியைக் கதாநாயகியாக நடிக்கவைக்க ஆசைப்பட்டேன் – இயக்குனர் சந்தீப் ரெட்டி!

நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் மாதவன் & சித்தார்த்தின் ‘டெஸ்ட்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்