Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரில் சஸ்பென்ஸ் ரொமான்ஸ்.. பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ டிரைலர்..!

Mahendran
சனி, 13 ஜூலை 2024 (13:11 IST)
பிரசாந்த் நடித்த அந்தகன் திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகிய நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்ட பலரது நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான திரைப்படம் அந்தகன். 
 
இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாராகிய நிலையில் இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாகி இருக்கும் நிலையில் அந்த ட்ரெய்லரின் இறுதியில் வரும் ஆகஸ்ட் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கண் தெரியாத மாற்றுத்திறனாளியாக பிரசாந்த் நடித்திருக்கும் இந்த படத்தில் சிம்ரனுக்கு வெயிட்டான கேரக்டர் என்பதும் திரில் சஸ்பென்ஸ் மற்றும் காமெடி ரொமான்ஸ் ஆகியவை கலந்து இருக்கும் இந்த படம் நிச்சயம் பிரசாந்துக்கு ஒரு நல்ல ரி என்ட்ரி படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Edited by Mahendran

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்ணாடிய உடைச்சுட்டு வந்தாரு.. அஜித் அதை செய்யலைனா..? - விடாமுயற்சி விபத்து குறித்து பேசிய ஆரவ்!

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

ரஜினி, விஜயகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்!

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments