Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரகாஷ்ராஜ், இயக்குனர் லடாய் - சேர்த்து வைத்த சூப்பர் ஸ்டார்

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2014 (11:50 IST)
பிரகாஷ்ராஜ் ஒரு படத்தில் கமிட்டானால் அந்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் கிரகம் பிடித்தது என்று அர்த்தம். ஒன்பது மணி படப்பிடிப்புக்கு பன்னிரெண்டு மணிக்கு வந்து நிற்பார். கமலுடன் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் நடித்த போது, பிரகாஷ்ராஜுக்காக கமல் உள்பட யூனிட்டே காத்திருக்கும்.
 
தெலுங்குப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சியுடன் பிரகாஷ்ராஜுக்கு லடாய். அவரை தனது படங்களில் வம்சி பயன்படுத்துவதில்லை. ஆனால் இந்த வருடம் வெளியான ராம் சரண் தேஜாவின் கோவிந்துடு அந்தரிவடேலே படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். படம் ஹிட்.
 
எப்படி இவர்களின் லடாய் முடிவுக்கு வந்தது?
 
மேற்படி படத்தில் குறிப்பிட்ட வேடம் ஒன்றில் பிரகாஷ்ராஜ் நடித்தால் நல்லது என்று அனைவரும் விரும்பியுள்ளனர். ஹீரோ ராம் சரண் தேஜாவின் தந்தை சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் எண்ணமும் அதுதான். வம்சியை அழைத்த அவர், நீங்க சிறந்த இயக்குனர். பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர். நீங்கள் பிரிந்திருப்பது சினிமாவுக்குதான் இழப்பு என்று பேச, அனைத்தையும்விட சினிமாதான் எனக்கு முக்கியம் என்று வம்சியும், பிரகாஷ்ராஜுடன் பேச வேண்டும் என்று அவரது மேனேஜருக்கு தகவல் சொல்ல, பிரகாஷ்ராஜே வம்சியை தேடி வந்துவிட்டார்.
 
அப்புறமென்ன... பகையை மறந்து படத்தில் நடிக்க, படமும் ஹிட்.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

Show comments