Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் இருந்து விலகுவதாக பிரகாஷ் ராஜ் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:33 IST)
தெலுங்கு நடிகர்கள் சங்கத் தேர்தலில் தோல்வி அடைந்த பிரகாஷ் ராஜ் நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதற்கு முன்னதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து இப்போது அவர் தெலுங்கு சினிமா நடிகர்களின் சங்கமான மா எனப்படும் மூவி ஆர்டிஸ்ட் அசோஷியேஷன் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

ஆனால் பிறப்பில் கன்னடரான பிரகாஷ் ராஜ் தெலுங்கு சினிமா நடிகர் தேர்தலில் நிற்பதற்கு அங்குள்ள நடிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதாம். ஆனால் பிரகாஷ் ராஜை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவராகவே கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்தார். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ’21 ஆண்டுகளாக தான் தெலுங்கு படங்களில் நடித்து வந்தும், தன்னை தோற்கடிக்க அந்நியனாக காட்டி வெற்றி பெற்றுள்ளனர். இதை வாக்களித்தவர்களும் ஏற்றுள்ளனர். இதனால் என்னால் அவர்களுடன் இருக்க முடியாது என்பதால் நான் விலகுகிறேன். ஆனால் தொடர்ந்து படங்களில் நடிப்பேன்.’ எனக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments