Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளிய பிரபல தொகுப்பாளினி

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (12:02 IST)
நடிகையும், டிவி தொகுப்பாளினியாகவும் உள்ளார் ரம்யா. தற்போது படங்களின் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. விஜய்யின் தீவிர ரசிகையான இவர், விஜய்யுடன் பழகிய அனுபவத்தை பற்றி கூறியுள்ளார். சின்னத்திரையில் கலக்கிய ரம்யா, விளாயாட்டிலும்  ஆர்வம் கொண்டவர்.

 
இந்நிலையில் தொகுப்பாளினி ரம்யா விஜய்யை மிகவும் எளிமையானவர், மரியாதையானவர் என பாராட்டியுள்ளார். தமிழ்  சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கான ரசிகர்கள் ஏராளம். அதேபோல் பிரபலங்கள் பலரும்  இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.
 
ரம்யா கூறுகையில் 'விஜய் அண்ணா மிகவும் எளிமையாக இருப்பார். அவரது வீட்டிற்குச் சென்றால் வரவேற்பதில் தொடங்கி  காரில் ஏறுவதுவரை நம்மை பெரிய ஆள் போல ஃபீல் பண்ண வைப்பார். போலியாக இல்லாமல் நேர்மையாக நடந்து  கொள்வார். நம்முடைய கருத்தை ஏற்றுக்கொள்வார். அவரது ஒரு படம் அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை என்று நேரடியாகச்  சொன்னால் கூட அந்த விமர்சனத்தை சாதாரணமாக ஏற்றுக்கொள்வார். அந்த நிலையில் நான் இருந்தால் இப்படி இருப்பேனா என்று தெரியவில்லை. விஜய் அண்ணா அநியாயத்திற்கு நல்லவர்' என்று கூறியுள்ளார் ரம்யா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments