Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

vinoth
வியாழன், 20 பிப்ரவரி 2025 (08:25 IST)
தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக இருந்து, ஹீரோவாக  பல படங்களில் நடித்த பின்னர் போக்கிரி படம் மூலம் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் பிரபுதேவா. இவர் பாலிவுட் சென்று அங்கும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். ஆனால், அவரது சமீபத்தைய படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.

அதனால் அவர் மீண்டும் நடிப்பு பாதைக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அதில் எந்த படங்களும் பெரிதாக அவருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. இதனால் அவர் நடிப்பில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸான ஜாலியோ ஜிம்கானா படம் வந்த தடம் கூட தெரியாமல் போனது.

இந்நிலையில் இப்போது பிரபுதேவா சென்னை YMCA மைதானத்தில் லைவ் நடன நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா என்னென்ன பாடல்களுக்கு நடனமாடப் போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

சத்தத்தை வைத்து பயமுறுத்தும் ‘சப்தம் 2’ டிரைலர்…எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments