Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாடா படத்தை ஓடிடியில் பாத்துட்டு பாராட்டித் தள்ளிய பிரபலம்!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (08:06 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து இப்போது அவர் நடித்துள்ள டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடித்துள்ளார். படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். படத்தில் சில பிரச்சனைகள் மற்றும் உணர்வு சுரண்டல் காட்சிகள் இருந்தாலும், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதிலும் நகர்ப்புறங்களில் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை இந்த படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்த நிலையில் தற்போது ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் ஓடிடியில் இந்த படத்தைப் பார்த்துள்ள பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான பிரபுதேவா “டாடா படம் பார்த்தேன். இயக்குனர் மிகச்சிறப்பான ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். நடிகர், நடிகைகள், ஒளிப்பதிவாளர் என படக்குழுவினர் அனைவரும் மிகச் சிறப்பான பணியை செய்துள்ளார்கள்” எனப் பாராட்டித் தள்ளியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியன் 2 படத்தோடு மோதும் பார்த்திபனின் ‘டீன்ஸ்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க இதுதான் காரணம்… தன் ஸ்டைலில் குழப்பமான பதிலைக் கொடுத்த கமல்!

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments