Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த மகளுக்கு "நயன்தாரா" என பெயர் வைத்த பிரபு தேவா? தீயாய் பரவும் தகவல்!

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (13:23 IST)
பிரபல நடிகரும்  நடன இயக்குநருமான பிரபு தேவா ரமலத் என்ற பெண்ணை 1995⁠ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் நயன்தாராவுடன் நெருக்கமாக பழகி காதலித்து அவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததால் முதல் மனைவிக்கு மனக்கசப்பு ஏற்பட்டு ⁠2011ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 
 
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடிக்க நயன்தாரா மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். அதன் பின்னர் இது சரிவராது என நயன்தாரா- பிரபு தேவா ஜோடி பிரிந்தனர். பின்னர் கொரோனா காலகட்டத்தில் மும்பையில் ஹிமானி சிங் என்ற பிசியோதெரபிஸ்ட் உடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.
 
பின்னர் அவரை ரகசிய முறையில் திருணம் செய்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பிரபுதேவா - ஹிமானி சிங் ஜோடி திருப்பதி கோயில் தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அண்மையில் தான் இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரபுதேவா குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் மொத்த குடும்பம் மகிழ்ச்சியில் இருக்கிறதாம். 
 
இந்நிலையில் தற்போது தன் மகளுக்கு நயன்தாரா என பெயர் வைத்திருப்பதாக செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஆனால், இது முற்றிலும் பொய்யான செய்தி என பிரபு தேவாவின் நண்பர்கள் வட்டராம் கூறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!

கேம்சேஞ்சர் படத்தின் அடுத்த பாடல் வேற லெவல்ல இருக்குமாம்… இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments