Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேர எல்லாம் மாததலீங்க.. பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரபாஸ் தரப்பு!

vinoth
வியாழன், 18 ஜனவரி 2024 (07:22 IST)
தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதற்கு பிறகு பல பேன் இந்தியா பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன. ஆனால் அவர் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் என அனைத்து படங்களும் தோல்வியை தழுவின. சலார் மட்டும் ஓரளவு வெற்றிகரமாக ஓடியது. ஆனாலும் எதிர்பார்த்த வசூலை தரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது அடுத்த பேன் இந்தியா படமான ‘கல்கி 2898 ஏ.டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே என பலர் நடிக்கும் இந்த படம் பிரபாஸுக்கு வெற்றி படமாக அமையுமா என்பது குறித்த கேள்விகளும் இருந்து வருகின்றன.

இப்போது இயக்குனர் மாருதி இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படமான ராஜாசாப் போஸ்டரில் ஆங்கிலத்தில் PRABHAS என குறிப்பிடுவதற்கு பதிலாக PRABHASS என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெயரின் கடைசியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ‘எஸ்’ நியூமராலஜிப்படி பிரபாஸ் வைத்துக் கொண்டுள்ளதாகவும், முந்தைய படங்களை போல இந்த படமும் தோல்வியை தழுவி விடாமல் இருக்க இந்த மாற்றம் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.

ஆனால் இதை பிரபாஸ் தரப்பு மறுத்துள்ளது. போஸ்டர் டிசைனில் தெரியாமல் நடந்த தவறாக ஒரு எழுத்து கூடி விட்டதாகவும், அதனால் பிரபாஸ் பெயரை எல்லாம் மாற்றவில்லை என்று அவரது மேனேஜர் விளக்கமளித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments