Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த பிரபாஸின் கல்கி!

vinoth
சனி, 13 ஜூலை 2024 (15:09 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

இந்த படம் முதல் நாளில் 191.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து இதுவரை இந்திய சினிமாவில் எந்த படமும் செய்யாத சாதனையை படைத்தது. அதன் பின்னர் சீராக ஒவ்வொரு நாளும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னால் இந்த படம் 900 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் பிரபாஸ் பாகுபலி 2 படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக 1000 கோடி ரூபாய் வசூலைக் கொடுத்த முதல் தென்னிந்திய ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments