Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் எப்போது?

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (14:58 IST)
பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற  நடிகர் பிரபாஸ், தற்போது ’ராதே ஷ்யாம்’ ‘சலார்’ மற்றும் ஆதிபுருஷ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ’ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 30ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டதன் காரணமாக திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது 
 
இந்த நிலையில் ராதே ஷ்யாம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியதாகவும் இந்த படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் மீண்டும் ’ராதே ஷ்யாம்’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை யூவி கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் ஹிந்தி பதிப்பிற்கு மனோஜ் என்பவரும் இசையமைத்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments